நாடு முன்னேற நல்லிணக்கம் அவசியம்! -சந்திரிகா

நாட்டை முன்னேற்றமான பாதையில் கொண்டுசெல்ல நல்லிணக்கம் அவசியமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு சமய ஒருமைப்பாட்டு நிகழ்வுகளின் ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சமாதான புத்தாண்டு உதயம் – தேசிய நல்லிணக்க புத்தாண்டு பெருவிழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பல ஆண்டுகளுக்கு முன்னர் இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளால் யுத்தம் மேற்கொள்ளும் அளவிற்கு நாடு சென்றிருந்ததென குறிப்பிட்டார்.

தற்போது இந்தநிலைமையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறதென்றும் அவர் தெரிவித்தார். அத்தோடு நாட்டில் நல்லிணக்கம் இல்லாமல் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.