மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் – ஒப்பந்தம் கைச்சாத்து

கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சுக்கும் கெனடியன் கொமர்ஷியல் கோப்போரேஷன் நிறுவனத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம், மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவோட்ஸ் வலுவுடைய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.