கிண்ணியா, வடசலாற்று பாலத்தை அமைத்து தருமாறு கோரிக்கை!

திருகோணமலை – கிண்ணியா, பூவரசண்தீவு கிராமத்தையும் மஜீத் நகரையும் இணைக்கும் வடசலாற்று பிரதான வீதியில் பாலம் அமைக்கப்படாமையால் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இப்பாலத்தை அமைத்துத் தருமாறு கோரி பொதுமக்கள் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த பயனும் கிட்டவில்லையென தெரிவித்துள்ளனர்.

பாலம் அமைக்கப்படாமையினால் மாரி காலங்களில் வெள்ளத்தில் உயிரிழப்புகளும், விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வடசலாற்றினூடாக தினமும் பயணம் செய்கின்ற 200இற்கும் மேற்பட்ட விவசாயிகள், கிராமவாசிகள் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

இப்பாலத்தை அமைத்து தருமாறு உரிய அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.