புதையல் தோண்டிய மூவர் கைது!

புதையல் தோண்டிய மூவர் கைது!

புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட இளைஞர்கள் மூவர் தம்புள்ள பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ள பகுதியில் காணப்படும் கற்பாறையொன்றில் புதையில் தோண்டும் நோக்குடன் புதையல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைவாக நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கரந்தெனிய மற்றும் தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 18 , 23 , 30 ஆகிய வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது புதையல் அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலதிக விசாரணைகளை தம்புள்ள பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.