புளியமுனை கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து அட்டகாசம்!

முல்லைத்தீவு, புளியமுனை கிராமத்திற்குள் இன்று அதிகாலை யானைக் கூட்டம் ஒன்று புகுந்து தென்னை மரங்கள் உள்ளிட்ட விவாசாய வாழ்வாதாரப் பயிர்ச் செய்கைகளை சேதப்படுத்தியுள்ளன.

கடந்த நாட்களில் புளியமுனை கிராமத்திற்குள் புகுந்த யானைகள் தற்காலிக வீடுகளை சேதப்படுத்தியிருந்ததுடன் விவாசாய வாழ்வாதாரப் பயிர்ச் செய்கைகளையும் சேதப்படுத்தின.

இந்நிலையில் மேலும் பல யானைகள் இன்று அதிகாலை அதே கிராமத்திற்குள் புகுந்து வாழ்வாதார பயிர்ச் செய்கைகளை அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.