வவுனியாவில் மிதிவெடிகள் மீட்பு

வவுனியா மாமடுவ பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து நேற்று மாலை 13 மிதி வெடிகளை பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை தனது காணியை பைக்கோவின் உதவியுடன் துப்பரவுப்பணி மேற்கொண்ட காணியின் உரிமையாளர் அப்பகுதியில் மிதி வெடிகள் காணப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.

இதையடுத்து வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் பாதுகாப்பு வலயத்தினை ஏற்படுத்தியதுடன் மாமடுவ விஷேட அதிரடிப்படைமயினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இன்றைய தினம் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டு மீட்கப்பட்ட ஜொனி மிதிவெடிகள் எனச் சந்தேகிக்கப்படும் வெடிபொருளை அழித்தொழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.