கழிப்பறையில் இரகசிய கமெரா – கடற்படை அதிகாரிக்கு எதிராக விசாரணை!

கழிப்பறையில் இரகசிய கமெராவை பொருத்தியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள கடற்படை அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வொஷிங்டனில் அமைந்துள்ள நியுஸிலாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உயர் கடற்படை அதிகாரிக்கு எதிராகவே இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆபாசக் காணொளியைப் பதிவுசெய்யும் முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நியுஸிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்போது பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் காணொளிகள் கடற்படை அதிகாரியின் மடிக்கணினியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு மீட்கப்பட்ட காணொளிகளின் அடிப்படையிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.