வெடிகுண்டு தாக்குதல் – அமைச்சர் உட்பட நால்வர் பலி!

சதீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஷியாமாகிரி மலைப்பகுதியில் இருந்து குவக்குண்டா நோக்கி சென்றுகொண்டிருந்த அமைச்சர் பீமா மாண்டவியின் வாகனம் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் அமைச்சர் பீமா மாண்டவி மற்றும் 4 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் பாதுகாப்பு வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தாண்டேவாடாவில் இம்மாதம் 11ஆம் திகதி முதற்கட்ட வாக்குபதிவுகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.