பிரான்சில் விறுவிறுப்படைந்துள்ள மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகள்!

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2019 கடந்த 24.03.2019 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது .

தொடர்ந்து போட்டிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறித்தல் பகுதியில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்றுவருகின்றது.

கடந்த (31.03.2019) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் ஈகைச்சுடரினை 2000 ஆம் ஆண்டில் கைதடி கோப்பாய் பகுதியில் முன்னகர்ந்த படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்த எல்லைப்படை வீரவேங்கை கலைச்செல்வன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார்.