இன்றைய ராசிபலன் 11-04-2019

மேஷம்

மேஷம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் வேலை யாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் யதார்த்தமாக பேசுவதைக் கூட சிலர் வேறு அர்த்தத்தில் புரிந்து கொண்டு உங்களை விமர்சிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான் மையும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்
பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். மதிப்புக்கூடும் நாள்.

கன்னி

கன்னி: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர்முடிவுகள் எடுப்பீர்கள். பழையகடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

துலாம்

துலாம்: கடந்த இரண்டு நாட் களாக இருந்த மன உளைச்சல் நீங்கி தெளிவுப் பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள்.
வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்றுசெய்வது நல்லது. யாரையும் நம்பி உறுதி மொழி தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்ல வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங் குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்

கும்பம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மாறுபட்ட அணுமுறையால் சாதிக்கும் நாள்

மீனம்

மீனம்: எதிர்பார்த்த வேலைகள் தாமதமானாலும் எதிர்பாராத சில காரியங்கள் முடிவடையும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.