திடீர் கோடீஸ்வரரான அரச அதிகாரி! விருந்துபசாரத்திற்காக ஏழரை லட்சம் செலவு!

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசாங்க திணைக்களமொன்றின் தலைவராக கடமையாற்றி வரும் அதிகாரியொருவர் மதுபான விருந்துபசாரமொன்றிற்காக ஏழரை லட்சம் ரூபா செலவிட்டுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக எந்தவொரு சொத்தும் இல்லாத குறித்த அதிகாரி தற்பொழுது பில்லியன்களுக்கு அதிபதியாக உருவாகியுள்ளார்.

பிரபல அமைச்சர் ஒருவரின் ஆதரவினால் குறித்த நபர் அரசாங்கத் திணைக்களமொன்றின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.

பிரபல அமைச்சர் ஒருவருக்கு விருந்துபசாரம் வழங்குவதற்காக குறித்த அதிகாரி 735000 ரூபா செலவிட்டுள்ளார்.

இந்த அதிகாரி செலவிட்டமைக்கான ஆதாரங்களும் வெளியிபடப்பட்டுள்ளதுடன் அதிகாரியின் பெயர் விபரங்களும் வெளியிடப்படும் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.