இலங்கையில் கடுமையாக்கப்படும் புதிய நடைமுறை! மீறினால் சட்ட நடவடிக்கை!

மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு தரமற்ற மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு மோசடியான வர்த்தகத்தில் ஈடுபடுவோரை உடனடியாக பொதுமக்கள் சுகாதார அமைச்சுக்கு அறியத் தர வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்தந்த பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதர்களிடம் இது குறித்து முறைப்பாடு செய்யுமாறு அமைச்சின் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை உணவகங்களில் கையுறை இல்லாமல் உணவுப்பொருட்களை பரிமாறினால் அதனை நிராகரிக்கும் உரிமை நுகர்வோருக்கு உள்ளது.

கையுறை இன்றி உணவுப்பொருட்களை விநியோகிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.