தயாசிறி ஜயசேகர ஐ.தே.க. விற்கு செல்ல முயற்சியா?

தயாசிறி ஜயசேகர ஐ.தே.க. விற்கு செல்ல முயற்சியா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசிய கட்சிக்கு செல்வதற்கு முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி குறித்து அதிருப்தியுடனேயே பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகர ஒரு நகைசுவையாளர் போன்று கருத்துக்களை முன்வைத்துள்ளாரென்றும் அவர் கடந்த காலங்களில் தனது தேவைக்கேற்ப அடிக்கடி கட்சி விட்டு கட்சி தாவிய ஒருவரென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு செல்வதற்கு முயற்சிப்பதாகவும் அதனாலேயே இவ்வாறு மஹிந்த தரப்பை குறை கூறிக்கொண்டிருப்பதாகவும் அவர் இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மாத்திரமின்றி ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்காவிட்டால் அது அவர்களுக்கு பாரிய விளைவை தோற்றுவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்