வங்கிக்கடன் வட்டி வீதம் குறைக்கப்படும்!

சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் வங்கிக்கடன் வட்டிவீதம் குறைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே பிரமதர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“வங்கி வட்டி வீதத்தை குறைப்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அந்தக் குழுவின் தலைவரினால் இன்று முற்பகல் தனக்கு கையளிக்கப்பட்டதாக பிரதமர் கூறினார்.

52 நாள் நிர்வாக காலத்தில் நாட்டின் பொருளாதாரம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளதாக” பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.