எண்ணெய் தொழிற்சாலையில் வெடிப்பு சம்பவம்!

அத்துருகிரிய பகுதியல் இரும்பு எண்ணெய் தொழிற்சாலை ஒன்றில் தாங்கி வெடித்ததில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்பு உருக்கு நிறுவனம் ஒன்றில் அனல் எண்ணெய் களஞ்சியசாலையில் உள்ள தாங்கி ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளது.

நேற்று மாலை 06.00 மணியளவில் இடம்பெற்ற இந்த வெடிப்பு காரணமாக ஊழியர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெடிப்பு சம்பவத்தால் ஏற்பட்ட தீப்பரவலை தீயணைப்பு படையினர் இணைந்து கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததுள்ளனர்.

வெடிப்பு சம்பவத்தால் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.