இன்று முதல் மின்வெட்டு இல்லை.

மின்வெட்டு இன்று முதல் அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

கடந்த மார்ச் 25ஆம் திகதி முதல் நாடுபூராவும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. வரட்சியுடனான காலநிலையுடன் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், தினமும் 4மணி நேர மின்வெட்டு முன்னெடுக்கப்பட்டது.

ஆனால், மேலதிக கேள்வியை நிறைவு செய்யும் வகையில் தனியார் துறையிடம் இருந்து 500மெகா வோட் மின்சாரம் பெற மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

குறை நிரப்பு அடிப்படையில் ஒன்று முதல் இரண்டு வருடங்கள் வரை மின்சாரம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர மாற்றுவழிகளினூடாகவும் மின்சாரம் உற்பத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு இன்று முதல் அமுல்படுத்தப்படாத நிலையில், எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது

கடந்த இரு வாரங்களுக்கு மேலாக நீடித்த மின்வெட்டினால் பொதுமக்கள் மட்டுமன்றி தொழிற்சாலைகள், தொழில் முயற்சியாளர்கள், உட்பட சகல தரப்பினரும் பாதிக்கப்பட்டார்கள். காலையில் 3மணி நேரமும் மாலையில் ஒரு மணி ​நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது