தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டு வண்டி சவாரி மன்றத்தினை, யாழ் மாவட்ட சங்கமாக பதிவு செய்யப்பட்டது.

யாழ் மாவட்ட மாட்டுவண்டி சவாரி சங்கம் யாழ் மாவட்ட சங்கமாக பதிவு செய்யப்பட்டது.

தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டுவண்டி சவாரி இலங்கையில் நீண்டகாலமாக நடார்த்தப்பட்டு வருகின்றது.

சுமார் 50 ஆண்டுகளிற்கு மெலாக சவாரி திடல்கள் உருவாக்கப்பட்டு, காளைகள் புாட்டியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

ஆரம்ப காலத்தில் பசுக்களும் குறித்த போட்டிகளில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும், பசுக்களை இவ்வாறான போட்டிகளில் ஈடுபடுத்துவதை கால போக்கில் போட்டியாளர்கள் தவிர்த்து வந்தனர்.

இந்தியாவில் ஜல்லிகட்டு, மங்சாவிரட்டு உள்ளிட்ட காளைகளுடனான விளையாட்டுக்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இலங்கையின் குறிப்பாக வடக்கு பகுதியில் மாட்டுவண்டி சவாரி போட்டிகள் நடார்த்தப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய பிரதேசங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டு போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.

ஆரம்ப காலத்தில் வீதிகளில் குறித்த போட்டிகள் இடம்பெற்று வந்ததாகவு்ம, கால ஓட்டத்தில் சவாரி திடல்கள் அமைக்கப்பட்டு புாட்டியாக இடம்பெறுவதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த வருகின்றனர்.

இந்த நிலையில், மாட்டுவண்டி சவாரிகளை சட்டரீதியாக முன்னெடுத்து செல்வதற்கு சங்கங்களை பதிவு செய்வதில் பெரும் சிரமங்களை சாரியாளர்கள் எதிர்கொண்டு வந்தனர்.

மிருகவதை சட்டத்தின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும் என்ற அச்சமும் ஒரு தரப்பினரிடம் இருந்து வந்த புாதிலு்ம, தமிழர் பாரம்பரிய விளையாட்டான மாட்டுவண்டி சவாரியினை பலரும் தைரியத்துடன் தொடர்ந்தும் முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில், மாவட்டுவண்டி சவாரி சேங்கங்களை பதிவு செய்வதற்கு அவ்வந்த சங்கங்கள் பல்வேறு முயற்சிகை எடுத்தவந்ததுடன், பல தரப்பினரிடமும் குாரியும் வந்தனர்.

இந்த நிலையில் குறித்த சங்கம் முதல் முதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் முயற்சியினால் குறித்த சவாரி சங்கம் முதல் முதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பதிவு சான்றிதழை கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள மக்கள் குறைகேள் சந்திப்பு நாளான புதன்கிழமை யாழ் மாவட்ட சவாரி சங்கத்திற்கான அனுமதியை சவாரி சங்கத்தின் உபதலைவராக செயற்பட்ட நித்தியானந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் கையளித்திருந்தார்.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அமைப்பாளர் சின்னத்துரை உதயசீலன் ,யாழ் காரியாலய இணைப்பாளர் பிரதாப் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டு வண்டி சவாரி மன்றத்தினை , யாழ் மாவட்ட சங்கமாக பதிவு செய்யப்பட்டு தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விவசாய பிரதி அமைச்சருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் புத்துயிர் அளித்துள்ளதாக யாழ் மாவட்ட சவாரி சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சங்கத்தினை பதிவு செய்வதற்கு பெரும் முனைப்புக்களை நாம் எடுத்திருந்தோம். இதேவேளை பல தரப்பினரிடம் நாம் இந்த கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தோம்.

எனினும் பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியினால் நாம் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்து பதிவுக்கான சாத்தியம் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

தமிழர் பாரம்பரிய விளையாட்டு அழிவடைந்து போகாது, அடுத்த சந்ததியினரிடம் கையளிக்க இந்த பதிவு இன்றியமையாத ஒன்றாக இருக்கும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.