வவுனியாவில் வரலாறு காணாத வெப்பநிலை!

வவுனியா கலைமகள் சனசமூக நிலைய புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தினால் வருடா வருடம் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படும் விளையாட்டுக்கள் அனைத்தும் கடுமையான வெப்பம் காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வவுனியாவில் வரலாறு காணாத வெப்பநிலை மற்றும் கடும் வரட்சி காரணமாகவே குறித்த போட்டிகள் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த விளையாட்டு நிகழ்வு பிறிதொரு தினத்தில் இடம்பெறுமென நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.