சுங்கத்திணைக்களத்தில் டிஜிட்டல் கையொப்ப முறை அறிமுகம்.

இறக்குமதியின் போது ஏற்படும் ஒழுங்கீனங்களை தடுப்பதற்காக சுங்கத்திணைக்களம், டிஜிட்டல் கையொப்ப திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஏற்கனவே இறக்குமதிகளின் போது போலியான கையொப்பங்கள் பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்தே இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

இதன்படி இறக்குதியாளர் ஒருவர் இடும் கையொப்பம், கையடக்க தொலைபேசி கட்டமைப்பின் ஊடாக சுங்கத்திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு அது உறுதிசெய்யப்படவுள்ளது.

இந்த திட்டம் அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வருகிறது என தகவல் கிடைத்துள்ளது.