மோடிக்கு உயரிய விருதளிக்கும் ரஷ்யா!

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உள்ளிட்ட பிற நாடுகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருதுகளை வழங்கி கௌரவித்துள்ள நிலையில் ரஷ்யாவும் அந்நாட்டின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருதை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

ரஷ்யா-இந்தியா இடையே உறவை வலுப்படுத்துவதற்கு சிறப்பாக செயற்பட்டதாக கூறியே ‘புனித ஆண்ட்ரூ’ எனப்படும் விருதை மோடிக்கு வழங்கவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலுள்ள ரஷ்ய தூதரகம் இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் பிற நாடுகள் இதுவரை 8 சர்வதேச விருதுகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.