மங்கள அமெரிக்காவிற்கு பயணம்!

நிதியமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி அவர் இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார்.

வொஷிங்டன் நகரில் இடம்பெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தில் பங்கேற்கவே அவர் இந்த விஜத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் சென்றுள்ளனர்.

நிதியமைச்சர் எதிர்வரும் 18ஆம் திகதி வரை வொஷிங்டனில் தங்கிருப்பார் என அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.