தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு!!

அண்ணாநகரில் உள்ள தி.மு.க. பிரமுகர் வீட்டில் இன்று காலை மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் கார் தீப்பிடித்து எரிந்தது.

அண்ணாநகர் தி.மு.க. பகுதி செயலாளராக இருப்பவர் பரமசிவம். இன்று காலை 6 மணியளவில் பரமசிவத்தின் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது.

இதில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பரமசிவத்தின் கார் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் டி.பி.சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடத்தி வருகிறார்கள்.

பெட்ரோல் குண்டுகளை வீசியது யார்? என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.