யாழில் நடந்த கொடூரம் : கணவனும் மனைவியும் வைத்தியசாலையில்!

யாழில் தீக்காயமடைந்த மனைவியைக் காப்பாற்ற சென்ற கணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் மட்டுவில் வடக்கு சந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வீட்டில் சமைப்பதற்காக சிலிண்டர் காஸ் அடுப்பை மனைவி பற்ற வைத்துள்ள நிலையில் அதிலிருந்து வெளியான பெரும் தீச்சுவாலை மனைவி மீது பற்றியதையடுத்து அதனை அவதானித்த கணவன், மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார்.

எனினும் இருவரும் தீயில் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளை தீயில் படுகாயமடைந்த மனைவி யாழ். வைத்தியசாலையிலும், கணவன் சாவகச்சேரி வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.