மதுஷின் மொத்த சொத்து மதிப்புக்கள் ஒரு பில்லியன்?

அண்மையில் டுபாயில் கைதான பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் மொத்த சொத்து மதிப்புக்கள் சுமார் ஒரு பில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மதுஷூடன் நெருக்கமாக தொடர்புகளைப் பேணிய பாதாள உலகக்குழு உறுப்பினர்களை கைது செய்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக மதுஷின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான கெவுமாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சொத்து விபரங்கள் பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

மதுஷ் தனக்கு நெருக்கமானவர்களின் பெயர்களில் பாரியளவில் சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மதுஷ் நாடு கடத்தப்பட்டதன் பின்னர் அவருடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.