லண்டன் சென்ற 4 இலங்கையர்கள் அதிரடியாக கைது!

பிரித்தானியா சென்ற நான்கு இலங்கையர்கள் லண்டன் Luton விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஸ்காட்லாந்து யார்ட் பொலிஸாரின் உத்தரவிற்கமைய அவர்கள் Bedfordshire பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த புதன் கிழமை மாலை அவர்கள் சர்வதேச விமானம் ஊடாக லண்டன் சென்றடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

2000ஆம் பயங்கரவாத சட்டத்தின் 7 சட்டங்களின் கீழ் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.