தொடர்ந்தும் வலுவடைந்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்று மீண்டும் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 172.66 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும் கொழும்பு பங்குச்சந்தையிலும் அதிகரிப்பு நிலை ஏற்பட்டுள்ளதாக புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.