இருவர் வெட்டிக்கொலை!

செவனகல – நுகேகலயாய பகுதியில் இருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டியும் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த கொலைச் சம்பவத்தில் 39 மற்றும் 54 வயதான இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.