தமிழ் மக்களின் ஏக பிரதிநித்துவத்தை இழந்த கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் எடுத்த முடிவுகளால் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கூட்டமைப்பின் சில உறுப்பினர்களும் விரக்தி அடைந்துள்ளனர். இதனால் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்பிற்கான வாக்கு வங்கி வெகுவாக சரிந்துள்ளது.

தமிழ் சமூகத்தின் மத்தியில் புதிய அரசியல் கட்சிகள், கூட்டணிகள், கருத்தியல்கள் உருவாகியுள்ளன.

தமிழ் மக்களின் பிரச்சினைனகளை பேசுவதற்கான அனுமதி எமக்கு மட்டும் தான் அம்மக்களால் வழங்கப்பட்டுள்ளது என்று கூற முடியாத அளவிற்கு நிலைமைகள் மாறியுள்ளன.

அதாவது தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற நிலைமை இழக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அத்தரப்பினர் எடுத்த பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளால் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.