நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை !

நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின் விநியோகத்தடையேற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை, எம்பிலிபிட்டிய மற்றும் தெனியாய ஆகிய பகுதிகளிலேயே குறித்த மின் விநியோகத் தடையேற்பட்டுள்ளது.

புதிய லக்ஸபான மின்னுற்பத்தி நிலையத்தில் இருந்து பலாங்கொடை வரை மின்சாரத்தை விநியோகிக்கும் மின் கட்டமைப்பில் இடி, மின்னல் தாக்கியுள்ளமை குறித்த மின்தடைக்கு காரணமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.