அனுமதிப்பத்திரமின்றி பன்றி இறைச்சியை கொண்டு சென்ற நபர் விளக்கமறியலில்!

திருகோணமலை கந்தளாவ பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 12 கிலோ பன்றி இறைச்சியை கொண்டு சென்ற நபயொருவரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் சானிக்கா பெரேரா இன்று உத்தரவிட்டார்.

கந்தளாவ, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அலுத்ஒயா பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு விற்பனைக்காக அனுமதிப்பத்திரமின்றி 12 கிலோ பன்றி இறைச்சியை கொண்டு சென்ற போதே கந்தளாய் போக்குவரத்து பொலிஸார் நிறுத்தி சோதனை செய்த போதே சந்தேக நபர் பன்றி இறைச்சியை கொண்டு சென்றதை கண்டறிந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் வாசஸ்தலம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.