பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலை!

பிரித்தானியா, லூட்டன் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த நான்கு இலங்கையர்களையும் கடந்த புதன்கிழமை அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பெட்ப்வேச்சர் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைத்து அவர்களிடம் தொடர் விசாரணையை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே தற்போது, நான்கு இலங்கையர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.