ரணிலை பதவியிலிருந்து தூக்க நட்சத்திர ஹோட்டலுக்குள் சதி நடவடிக்கை!

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க பாரிய சூழ்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அந்த பதவியை பெற்றுக் கொள்வதற்காக பிரபல அமைச்சர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் பிரபல அமைச்சர்கள் சிலருடன் இந்த சூழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்காக பாரிய அதிகார போராட்டம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க, கரு ஜயசூரிய, நவீன் திஸாநாயக்க ஆகியோர் தலைமைத்துவத்தை பெற்றுகொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.