கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழ தமிழர்கள்! ஸ்டாலின் – ராகுல்காந்திக்கு பாடம் புகட்டுங்கள்.

இலங்கையில் இடம்பெற்ற இன படுகொலைக்கு தி.மு.க., பதில் சொல்லியே ஆக வேண்டும், என தமிழக சட்டமன்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

சாத்துார் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் ராஜவர்மன், விருதுநகர் லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் அழகர்சாமி ஆதரித்து சாத்துார் ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் செய்த போது இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“அ.தி.மு.க வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. 40 தொகுதி , 18 சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் இலங்கையில் நடைபெற்ற இன படுகொலைக்கு தி.மு.க., பதில் சொல்லியே ஆக வேண்டும்.

நமது ரத்த உறவுகளை இலங்கை இராணுவம் கொத்து கொத்தாக கொன்று குவித்தபோது வேடிக்கை பார்த்த தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணிக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

அ.தி.மு.க., பா.ஜ., தேர்தல் அறிக்கை தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது. சிறுபான்மையின மக்களின் உண்மை நண்பனாக திகழ்கிறார் மோடி” என அவர் மேலும் கூறியுள்ளார்.