மட்டக்களப்பில் கூலித் தொழிலாளி ஒருவரின் சடலம்.

மட்டக்களப்பு காஞ்சிரங்குடா கிராமத்தில் உள்ள மாமரத்தில் இருந்து கூலித் தொழிலாளி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான கதிர்காமத்தம்பி தருமலிங்கம் என்பவரின் சடலமே இவ்வாறு நேற்று மீட்கப்பட்டுள்ளது.

அதிகாலை 2 மணிக்கு எழுந்து வீட்டுக் கதவைத் திறந்து பார்த்தபோது வீட்டு வளவிலுள்ள மாமரக் கிளையில் தனது கணவர் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்ததாக மனைவி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுவருட மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் இவர் அதிக மதுபோதையில் இருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனை, விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.