இலங்கையை இன்று உலுக்கிய கோர விபத்து – உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்ட பொலிஸார்.

பதுளை, மஹியங்கனை பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது.

இந்நிலையில் கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து தியதலாவ நோக்கி பயணித்த பேருந்தும் பதுளை ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த வான் ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

வானில் பயணித்த 12 பேர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு கல்லடி , டச்பார் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களை சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்கள் ஆவார்கள்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்கள், மூன்று பெண்களும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு டச்பார் பகுதியை சேர்ந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வான் சாரதி தூக்க கலக்கத்தில் வான் பயணிக்க வேண்டிய வழித்தடத்திலிருந்து விலகி எதிர்த்திசை வாகனங்கள் பயணிக்க வேண்டிய வழித்தடத்தில் அதிவேகமாக வானைச் செலுத்திச் சென்றதால் தான் விபத்து ஏற்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள்

மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான ஜோஷப் ரெலின்டன் ஜோப்ஸ்,

50 வயதான சில்வியா ஜோஷப் (ஜோஷப் ரெலின்டன் ஜோப்ஸின் மனைவி)

32 வயதான லிஸ்டர் எலெக்ஸேன்டர்

27 வயதான நிஸாலின் எலெக்ஸேன்டர் (லிஸ்டர் எலெக்ஸேன்டரின் மனைவி)

04 வயதான ஹனாலி எலெக்ஸேன்டர் (லிஸ்டர் எலெக்ஸேன்டரின் மகள்)

07 வயதான பய்கா எலெக்ஸேன்டர் (லிஸ்டர் எலெக்ஸேன்டரின் மகன்)

48 வயதான யூடி பிரின்ஸ் ஹென்ட்ரிக்

42 வயதான மரியா பென்சியா ஹென்ட்ரிக் (யூடி பிரின்ஸ் ஹென்ட்ரிகின் மனைவி)

10 வயதான செரேபி ஹென்ட்ரிக் (யூடி பிரின்ஸ் ஹென்ட்ரிகின் மகள்)

19 வயதான பிரின்ஸ் ஹெட் ஹென்ட்ரிக் (யூடி பிரின்ஸ் ஹென்ட்ரிகின் மகன்)

காயமடைந்தவர்கள்

13 வயதான செகானி ஹென்ட்ரிக் (யூடி பிரின்ஸ் ஹென்ட்ரிகின் மகள்)

ஞாஎல பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான ரெசானி பர்கஸால்.