தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் சடலம் மீட்பு.

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள இல்லமொன்றில் இருந்து இன்று மதியம் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் இறுதியாண்டு கல்வி கற்கும் கிராம சேவையாளர் மகனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வேளையில் இளைஞனின் உறவினர்கள் அனைவரும் நகரத்திற்கு சென்றிருந்துள்ளதுடன், தந்தை வேலையில் இருந்துள்ளார்.

தனது தொலைபேசி அழைப்பிற்கு மகன் பதிலளிக்காதிருந்த நிலையில் தந்தை வீட்டிற்கு சென்று பார்த்த போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.