முல்லைத்தீவு பொதுவைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்துள்ளார்.

அண்மைக்காலமாக வைத்தியசாலையில் நிலவும் சில குறைபாடுகள் தொடர்பில் மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு ஆளுநரின் இந்த திடீர் கண்காணிப்பு விஜயம் அமைந்திருந்தது.