அனைத்து தேர்தல்களிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும்!

அனைத்து தேர்தல்களிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும்!

எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தை வீழ்த்தும் அனைத்து அதிகாரமும் எதிர்க்கட்சிக்கு உள்ளதென தெரிவித்துள்ள அவர்,

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகள் அனைத்தும் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.

பெல்லன்வில ரஜமஹால் விகாரையில் (புதன்கிழமை) இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுவதற்கு எவ்வித சதிகளும் முன்னெடுக்கப்படவில்லை.

முறையான வழிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியினை கைப்பற்றும் அனைத்து விதமான அதிகாரங்களும் எமக்கு காணப்படுகின்றது. விரைவில் நிரந்தரமான ஒரு ஆட்சி உருவாக்கப்படும்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது.

கட்சியின் அனைத்து தரப்பினரது கருத்துக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டே ஒருமித்த தீர்மானம் எட்டப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.