இந்த ஆண்டில் சிக்ஸர் மழை பொழிய வேண்டும்!

இந்த ஆண்டில் சிக்ஸர் மழை பொழிய வேண்டும்!

கிரிக்கெட்டில் முன்னாள் தலைவர் சங்கக்கார கையாளும் யுக்தியை, நுட்பத்தை அரசியலில் தான் கையாண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் பெயரில் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள கிராமத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“கிரிக்கெட்டில் சங்கக்கார கையாளும் யுக்தியை, நுட்பத்தை அரசியலில் களத்தில் நான் கையாண்டு வருகின்றேன்.

ஒரு கட்டத்தில் நிதானமாக ஆடுதல், மற்றுமொரு கட்டத்தில் அதிரடியாக ஆடுதல் என சூழ்நிலைக்கேற்ப வேகத்தை மாற்றிவருகின்றேன்.

எனினும் இந்த ஆண்டில் சிக்ஸர் மழை பொழிய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக இருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.