லண்டன் டெர்ரியில் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஊடகவியலாளர்!

லண்டன் டெர்ரியில் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஊடகவியலாளர்!

லண்டன்டெர்ரியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள பெண் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு அயர்லாந்தின் லண்டன்டெர்ரி நகரத்தில் ஏற்பட்ட கலகத்தின்போது, 29 வயதான பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில், Lyra McKee என்ற ஊடகவியலாளர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த கொலைச் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.