டெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு அறிவுறுத்தல்.

டெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர், டெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு, கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளானவை, முதலாம் தவணை முடிவடைந்து இரண்டாம் தவணைக்காக நாளை மறுதினம் (22) திறக்கப்படவுள்ளன.

இந்நிலையிலேயே, டெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு, கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தல் கல்வி அமைச்சினால் மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டெங்கு நோயிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்கில், இதற்கு முன்னரும் பல தடவைகள் டெங்கு தடுப்பு பிரசார நடவடிக்கைள், கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.