யாழ்ப்பாணத்தில் வாகனம் புடவைக் கடைக்குள் புகுந்து விபத்து.

யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் விநோதமான விபத்து ஏற்பட்டமையினால் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டள்ளது.

வீதியால் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று புடவைக் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளாமையினால் முதியவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

பருத்தித்துறை நகரத்தில் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள புடவை கடைக்குள் குறித்த வாகனம் புகுந்துள்ளது.

குறித்த புடவைக்கடை சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்து உடைகள் அனைத்தும் குறித்த வாகனத்தின் மீது விழுந்துள்ளது.

தெய்வாதீனமாக உயிர்ச் சேதங்கள் ஏற்படாத போதும், விபத்துக்குள்ளான வாகனம் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.