கிளிநொச்சியிலும் உயிர்ப்பின் திருநாளை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலும் உயிர்ப்பின் திருநாளை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

மானிடத்தை மீட்க வந்த கிறிஸ்து பாடுகள் அனுபவித்ததன் பின்னர் மனிதர்களால் கொலை செய்யப்பட வேண்டும் என தீர்க்கப்பட்டார்.

எவ்வித குற்றங்களும் நிரூபிக்கப்படாதவராய் நியயாதிபதிகளால் தீர்க்கப்பட்டபோதிலும் கிறிஸ்துவை சிலுவையில் அறையுங்கள் என மக்கள் கொந்தளித்தனர்.

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

அடக்கம் செய்யப்பட்ட கிறிஸ்துவின் சடலத்தை பார்க்க சென்றவர்கள் அவரின் உடலை காணவில்லை என அங்கலாய்த்தனர்.

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்.

அவர் பின்னர் பலருக்கு காட்சியளித்தார் என வேதாகமம் கூறுகின்றது.

அந்த விசுவாச வாழ்க்கையை உலகவாழ் கிறிஸ்தவர்கள் உயிர்ப்பின் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.

கிளிநொச்சியிலும் கத்தோலிக்க, கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. வழிபாடுகளில் பங்குகொண்டு மக்கள் உயிர்ப்பின் திருநாளை மகிழ்வுடன் வரவேற்றனர்.