மட்டு. சியோன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவம் : 5இற்கும் மேற்பட்டோர் பலி!

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிப்பச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 5இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு உயர் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள சியோன் தேவாலயத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கொழும்பிலுள்ள இரண்டு தேவாலயங்கிளிலும் வெடிப்புச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சம்பவங்களில் பலர் உயிரிழந்திருக்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன