மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் பலி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் புனித மைக்கல் கல்லூரிக்கு அருகிலுள்ள சியோன் தேவாலயமொன்றில் இன்று காலை வெடிப்பு நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.