மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.

மட்டக்களப்பு நகரில் புனித மைக்கல் கல்லூரிக்கு அருகிலுள்ள சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பலர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அதில் பெரும்பாலானோருக்கு இரத்தம் வழங்க வேண்டிய தேவை உள்ள போதும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ரத்த வங்கியில் ரத்தம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரத்த தானம் வழங்கக்கூடியவர்கள் உடனடியாக வைத்தியசாலையை அணுகி ரத்தம் வழங்குமாறு கோரியுள்ளனர்.

அத்துடன் கொழும்பு, நீர்கொழும்பு போன்ற பகுதிகளிலும் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில் அதில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளிலும், ரத்த தானம் வழங்குமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..