கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு.

கொழும்பு – கட்டுநாயக்க, பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 10 மணிமுதல் பண்டாரநாயக்க விமான நிலையத்தினுடைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைவாக விமான பயணிகள் தவிற ஏனையோர் விமான நிலைய வளாகத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டர்கள் எனவும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விமானப் பயணங்களை மேற்கொள்கின்ற பயணிகளை உரிய காலத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறும் விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இன்று காலை பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.