மட்டக்களப்பு குண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது!

குண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது!

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர் ஓட்டமாவடியை சேர்ந்த உமர் என்பவரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றினை பயன்படுத்தியே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகநபர், இன்று காலை ஆராதனை நடப்பதற்கு முன்னதாக பையொன்றை சுமந்துகொண்டு தேவாலயம் அருகில் நடமாடியுள்ளார்.

இதனை அவதானித்த ஆலயத்தின் குருமார் அவரை உள்ளே வருமாறு அழைத்துள்ளனர். அதனை மறுத்த அவர் வெளியே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வெளியே வர மறுத்த அவர் பின்னர் சென்று தேவாலயத்தை நோட்டம் விட்டதாக அங்கிருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் வெளியே சென்ற அந்த நபர், அங்குள்ள கடையொன்றிலிருந்து தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல இடங்களில் தொடர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 207 பேர் உயிரிழந்த நிலையில் 450இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.