கொழும்பு தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இடை நிறுத்தம்.

கொழும்பு தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இடை நிறுத்தம்.

கொழும்பிலிருந்து புறப்படவிருந்த தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இன்றும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பினை, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

காவல்துறையினரால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் வாகனமொன்றிலிருந்த குண்டொன்று வாகனத்துடன் வெடித்து சிதறியுள்ளது.

இந்நிலையில் வெடி குண்டு காணப்படுவதாக தெரிவித்து அப்பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.