கிழக்கு ஆளுநரை அவசரமாக சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்!

கிழக்கு ஆளுநரை அவசரமாக சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்!

வடக்கு, கிழக்கிலும் ஏதிர்வரும் 24ஆம் திகதி துக்கதினம் அனுஸ்டிக்குமாறு மட்டக்களப்பில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினருக்குமான அவசர சந்திப்பொன்று  கிழக்கு மாகாண ஆளுநர் மட்டக்களப்பு விடுதியில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சம்பவத்தினால் இனங்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் ஏற்பட்டுவிடாமல் எவ்வாறு பொதுமக்களை நடாத்துவதற்கான வழிகளை உருவாக்குவது மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்பட்டு விடாமல் இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையினை வளர்ப்பதற்கு துரித செயற்பாடுகளை முன்னடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதன்போது ஏதிர்வரும் 24ஆம் திகதி முழு வடகிழக்கிலும் துக்கதினமாக அனுஸ்டிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.